Thursday, July 17, 2014

அஜித், விஜய்யை புகழ்ந்த ஸ்ருதிஹாசன்!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்யின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் இவர்களை புகழ, இந்த லிஸ்டில் மீண்டும் ஒருவர் இணைந்துள்ளார்.உலக நாயகன் மகள் ஸ்ருதி டுவிட்டர் வலைத்தளத்தில் தன் கருத்துகளை அவ்வபோது தெரிவிப்பார்.
அதுபோல் தன் ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஒரு ரசிகர் ‘அஜித் என்றால் உங்கள் மனதிற்கு உடனே என்ன தோன்றும் ‘என்று கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளித்த ஸ்ருதி ஒரே வார்த்தையில் ‘அற்புதமான மனிதர்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் அடுத்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்கயிருக்கிறார்.இது குறித்து ஒரு தெலுங்கு பத்திரிக்கையில் விஜய்யுடன் நடிக்க ஆவலுடன் இருக்கேன், அவர் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment