Wednesday, July 2, 2014

மதம் மாறவில்லை: இஸ்லாத்தை பின்பற்றுகிறேன்: ஜெய்!

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவைத் தொடர்ந்து நடிகர் ஜெய்யும் முஸ்லிமாக மதம் மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இருவரும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பும் படங்களும் வெளியானது. இந்த நிலையில் ஜெய் தான் முஸ்லிம் மதத்துக்கு மாறவில்லை. ஆனால் இஸ்லாத்தை பின் பற்றுவதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: "நான் மதம் மாறவே இல்லை. நான் மதம் மாறிவிட்டதாக தவறான செய்திகள் வெளியாகி உள்ளது. ஆரம்பத்துல எந்த சாமியையும் கும்பிடாமல் இருந்தேன். இப்போது ஏதோ ஒரு சாமியை கும்பிடுகிறேன். அது நல்ல விஷயம்தானே. முஸ்லிம் வீட்டிலிருந்து ரம்ஜான் பண்டிகைக்கு பிரியாணி வந்தால் சாப்பிடுகிறோம். அது மாதிரி அவுங்க மதத்தை பின் பற்றுகிறேன். அதை ஏன் வித்தியாசமாக பார்க்குறாங்கன்னு புரியவில்லை" என்கிறார் ஜெய்.

Source: DINAMALAR

No comments:

Post a Comment