அஜித் தற்போது கௌதம்மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்று நமக்கு தெரியும்.
இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க நாயகிகளாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடம் ஒன்றில் அருண் விஜய் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தில் அருண் விஜய் ஏற்றிருக்கும் கேரக்டர் குறித்து தற்போது செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் ரத்னமே இதனை தெரிவித்திருக்கிறார். அதில், அஜித்துடன் இரண்டு படம் செய்கிறோம்.
ஏற்கெனவே ஒருமுறை கௌதம் மேனனுடன் நான் படம் செய்வதாக இருந்தது. ஆனால், அது இப்போதுதான் கைகூடியிருக்கிறது. அனுஷ்கா, த்ரிஷா நாயகிகளாக நடிக்கிறார்கள். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என இவ்வாறு கூறினார்.
Source: DINAMANI

No comments:
Post a Comment