பாடகி சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை இன்று காதல் திருமணம் செய்துகொண்டார்.
மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். சின்மயி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக புகழ்பெற்ற பாடகியாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார்.
பூமிகா, பத்மப்ரியா, சமீரா, கங்கனா ரணாவத், சமந்தா, காஜல் அகர்வால் என பல நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். தமிழில் தேசிய விருதுபெற்ற 'சர சர சாரக்காத்து' பாடலை சின்மயி தான் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் நடிகர் ராகுல் ரவீந்திரனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சக்கொடி காட்டவே சின்மயி-ரவீந்திரன் திருமணம் பெற்றோர்களால் பேசி முடிக்கப்பட்டது.
அதன்படி இன்று சின்மயி-ரவீந்திரன் திருமணம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இருவீட்டார் சார்பில் இருந்து உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தொடர்ந்து நாளை(மே 6ம் தேதி) திருமண வரவேற்பு நடக்கிறது. அதில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கின்றனர்.
மேலும் இவர்கள் தங்கள் திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் யாரும் பரிசு பொருட்கள் அல்லது பூச்செண்டுகள் கொண்டுவர வேண்டாம் என்றும், அந்த தொகையை லடாக்கில் உள்ள மலைசாதி மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கியிருக்கும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
SOURCE: DINAMANI

No comments:
Post a Comment