தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை பரிசீலிக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
அதில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட, பாமக வேட்பாளர் மணிரத்னம் தாக்கல் செய்திருந்த 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் எனில், அவரது வேட்பு மனுவை 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். அவ்வாறு, மணிரத்னத்தின் வேட்பு மனுவில் 10 பேர் முன்மொழியவில்லை என்று கூறி, அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி சரவணவேல்ராஜ் இன்று தள்ளுபடி செய்துள்ளார்.
பாமகவின் மாற்று வேட்பாளராக மணிரத்னத்தின் மனைவி சுதாவின் வேட்பு மனுவை பரிசீலிக்கும் பணி நடந்து வருகிறது.
photo & news: dinamani

No comments:
Post a Comment