நீலகிரி பாராளுமன்றத்
தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக, எஸ்.குருமூர்த்தி
வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனை திங்கள்கிழமை
நடைபெற்றது. இதில், எஸ்.குருமூர்த்தியின் வேட்புமனு தள்ளுபடி
செய்யப்பட்டது. பாஜகவின் அங்கீகார கடிதம் குறித்த நேரத்தில்
வழங்கப்படாததால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.
வேட்புமனு தள்ளுபடி குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எஸ்.குருமூர்த்தியின்
வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட முடிவுக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வேட்பு மனு தள்ளுபடி செய்ததற்கு
நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல்
ஆம் ஆத்மி வேட்பாளர் ராணியின் வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ராணி தாக்கல் செய்ய ஜாதி சான்றிதழ் 1986–ம் ஆண்டு பெறப்பட்ட சான்றிதழ்.
புதிய சான்றிதழை தாக்கல் செய்யாததால் ராணியின் மனுவை தள்ளுபடி செய்ததாக
தெரிவித்தனர்

No comments:
Post a Comment