Saturday, April 5, 2014

யாமியின் அழகை வர்ணிக்கும் சமூக வலைதளங்கள்

கவுரவம் படத்தின் மூலம், தமிழுக்கு வந்த பாலிவுட் வரவு யாமி கவுதமுக்கு, அந்த படம், பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனாலும், தன் பளீர் சிரிப்பால், இளசுகளை கவர்ந்தார். அந்த சிரிப்பில், நடன சூறாவளி பிரபுதேவாவும் காலியாகி விட, இந்தியில், தான் இயக்கி வரும், ஆக்ஷன் ஜாக்சன் படத்தின் ஹீரோயின் வாய்ப்பை, அவருக்கு கொடுத்து விட்டார்.
இதனால், யாமி, சமூக வலை தளங்களில் பிரபலமாகியுள்ளார். பல ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து, பாலின் நிறம் கூட யாமியின் நிறத்திற்கு முன்னால் தோற்றுப் போகும்; யாமியின் பளீர் சிரிப்பு பரவசத்தை தருகிறது என்று ஆளாளுக்கு எழுதி தள்ளுகின்றனராம்

No comments:

Post a Comment