நடிகை அனுஷ்கா, தமிழில், ரஜினி, அஜீத் நடிக்கும், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில், ஒப்பந்தமாகி இருப்பதால், சரித்திர படங்களுக்காக உடம்பை, ‘ஸ்லிம்’ பண்ணியிருந்த அனுஷ்கா, இப்போது, உடல் அழகை கூட்டும் சிகிச்சைகளிலும், உடற்பயிற்சிகளிலும், தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும், ரஜினி, அஜீத் ஆகிய, இருவருடனும் முதல் முறையாக இணைந்து நடிப்பதால், ‘இது, என் சினிமா கேரியரின் பொற்காலம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு என்னை யாரும் அசைக்க முடியாது’ என, உற்சாகமாக கூறி வருகிறார்.

No comments:
Post a Comment