Tuesday, April 8, 2014

1 நாளைக்கு 1 கோடி சம்பளம் வேண்டும் விஜய் குழுவினருக்கு அதிர்ச்சி குண்டுகளை விசிய தீபிகா!

கத்தி படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்ததையடுத்து, கோச்சடையான் தீபிகா படுகோனேவிடம் பேசினர். ஆனால், அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசினாராம்.
இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அப்படக்குழுவினர் தெறித்து ஓடி வந்து விட்டனர். இதையடுத்து, மும்பை நடிகை என்று போனாலே அகலக்கால்தான் வைக்க வேண்டியதிருக்கும் என்று யோசித்து, விரலுக்கு ஏற்ற வீக்கமாய் தென்னிந்திய நடிகைகளையே புக் பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
அதையடுத்து, தற்போதைய நடிகைகளில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நடந்த பரிசீலனையில், வேலாயுதத்தில் விஜய்யுடன் நடித்த ஹன்சிகா, சுறாவில் நடித்த தமன்னா ஆகியோரின் பெயர்கள் முன்வரிசையில் உள்ளதாம். இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.புள்ள, நல்ல செக்கச்செவேர்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு. நானோ தார் ரோடு மாதிரி: வடிவேல் புகழாரம்!
தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடிக்க ஆயத்தமானபோது கோலிவுட்டிலுள்ள பல முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், வடிவேலு என்றதும் அத்தன நடிகைகளும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினர். அதற்கடுத்து, வடிவேலுவைப்பற்றிய சங்கதி தெரியாத நடிகையாக கொண்டு வருவோம் என்று மும்பையில் இருந்தும் சில நடிகைகளை கூட்டி வந்தனர்.
ஆனால், அப்படி வந்த சில நடிகைகளிடம், கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் அப்படி இப்படி போட்டுக்கொடுத்து அவர்களை சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கே ஓட்டம் பிடிக்க வைத்தனர். ஆனால், அப்படி வந்தவர்களில், எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. வடிவேலுவுடன் நடித்தே தீருவேன் என்று தில்லாக நின்ற ஒரே நடிகைதான் மீனாட்சி தீட்ஷித்.
இவருடன் நடித்த அனுபவம் பற்றி வடிவேலு கூறுகையில், இந்த படத்துக்கு மீனாட்சி ஓ.கே ஆனதும், எனக்கு ஒரே பயம். இந்த புள்ளையையும் எதையாச்சும் சொல்லி ஓட வச்சிடக்கூடாதேன்னு பதட்டமா இருந்துச்சு. அது ஒருபக்கமிருக்க, என்னை நேருல பாத்தா அந்த புள்ள எங்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிடுமோங்கிற இன்னொரு பயமும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு.
அதனால, முதல் நாள் படப்பிடிப்புக்கு வர்றது வரை மீனாட்சி தீட்ஷித் கண்ணுல நான் படவே இல்லை. புல் மேக்கப்போட்டு, அந்த மன்னர் கெட்டப்போடதான் அவருக்கு காட்சி கொடுத்தேன் அதனால் என்னோட சுயரூபம் அந்த புள்ளைக்கு தெரியாம போச்சு.
அதுவும் இல்லாம சுமமா சொல்லக்கூடாது புள்ள, நல்ல செக்கச்செவேர்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு. நானோ தார் ரோடு மாதிரி இருக்கேன். ஆனாலும் அந்த புள்ள பெரிய மனசு பண்ணி எங்கூட நடிச்சிருக்கு. ரொம்ப நல்லாவும் நடிசசிருக்கு, அதனால் மீனாட்சிக்கு நான்தான் நன்றி சொல்லனும் என்கிறார் வடிவேலு

No comments:

Post a Comment