வட்டியும் முதலும் தொடர் மூலமாக நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு அறிமுகமான ராஜுமுருகன் இந்த படத்தில இயக்குனரா அறிமுகமாகியிருகாருங்க. வட்டியும் முதலும் தொடரா படிக்கும் போது அடுத்த வாரம் விகடன் எப்ப வரும் என ஒரு ஏக்கத்தில வெச்சிருந்த மனுஷன் இந்த படத்திலயும் அதை நிறைவேத்தி இருக்காருங்க.
படத்துல ஆடுகளம் முருகதாஸ் மற்றும் அட்டைக்கத்தி தினேஷ் நண்பரா வருபவர், சந்திரபாபு, ரெண்டு மனைவிகள், தலை நிமிராத மனிதர், PM, Governor, சங்கீதா, அஜித், விஜய் எல்லாத்துக்கும் மேல நம்ம MGR இப்படி பல கதாபாத்திரங்கள் வந்தாலும் இவங்களை எல்லாம் நம்ம மனசுல நிறுத்துன ராஜுமுருகனுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யுட்.
அட்டகத்தி தினேஷ் இனிமேல் உங்களுக்கு அட்டகத்தி அடையாளம் தேவையில்லை போல இருக்கு, கண்ணு தெரியாத பாத்திரத்தில் கலக்கிடீங்க. ஹீரோயினா வர பொண்ணு பேரு மாளவிகாவாம், அவங்கள மாதிரியே நீங்களும் ஒரு ரவுண்டு வாங்க.
படத்தை பத்தி சொல்லனும்ன, ரெண்டு பேருக்குள்ள இருக்குற காதல் அதுல வர சிறு சிறு மோதல், கொஞ்சம் ஊடல் அப்புறம் என்ன ஆச்சு இதுதான் கதை அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு போயிறலாம், ஆனா விஷயம் அது இல்லை அண்ணே. காரையும் மாரையும் பார்த்து காதல் வர்ற காலத்துல மனசை பார்த்து வந்த உன் காதல் நல்ல இருக்கும்ன்னு முருகதாஸ் ஒரு இடத்துல சொல்வாரு, சத்தியமான வார்த்தை. ஓம் நமசிவாயன்னு சொல்லிட்டு ஒருத்தர் படத்துல வருவாருங்க, பார்க்க காமெடி பீஸ் கணக்கா நல்லவரா கெட்டவரான்னு தெரியாம இருந்தாலும் கடைசியா ஒரு டயலாக் அவருக்கு செமையா மாட்டியிருக்கு. வரிசையா சொல்லிட்டே போகலாம் அந்த அளவுக்கு ராஜுமுருகன் மக்களோட மக்களா இருந்திருக்காருன்னு படம் பார்க்கும்போது தெரியுதுங்க.
மொக்கை படத்தை பத்தி மொத்ததுல என்ன சொல்ல வரேன்னு கேக்குறீங்களா, படம் ஒரு ரெண்டேமுக்கால் மணி நேரம் ஓடுதுங்க, படத்துல கொஞ்சம் கொஞ்சம் தொய்வு இருக்குற மாதிரி ஒரு யோசனை வந்தா கூட விடமா உக்காரவெச்சிடாரு ராஜுமுருகன்.
நல்ல படம், கொஞ்சம் நீளமான படம், ஒரு ரயில்வே ஸ்டேஷன் பார்த்திராத, அதில் உள்ள மக்கள் பத்தி தெரியாதவரா இருந்த உங்களுக்கு இந்த நீளம் கொஞ்சம் சலிப்பா கொடுக்கலாம், ஆனா படத்தில உள்ள ஒவ்வொருத்தரையும் எப்பவாவது ஒரு சூழல்ல நீங்க பார்த்திருந்த கடை காட்சி வரை உங்களுக்கு இந்த படம் அலுப்பு தராதுங்க.
படத்துல பல இடங்களில வசனத்துக்கு கைதட்டல் அள்ளுதுங்க குறிப்பா சொல்லனும்ன்னா “கண் இருக்குற ஆம்பளை எல்ல எடத்திலும் இருக்கான் ஆனா மனசு இருக்கிற ஆம்பளை?” “ரேடியோ கண்டுபுடிச்சது வேணா marconi யா இருக்கலாம் ஆனா அதை கேக்க வெச்சசது நம்ம இசைஞானி” இப்படி சொல்லிட்டே போகலாம். படத்துல MGR வேசத்துல ஒருத்தர் பேசமா நடிச்சிருப்பார், கடைசி வரைக்கு பேசமாட்டார் ஆனா கடைசில ஒரு விஷயம் செய்வார் பாருங்க செம அப்ளாஸ்.
ராஜுமுருகன் இந்த வருஷம் சினிமா பார்த்து இது வரைக்கும் விட்ட பணத்தை இந்த படம் மூலம் வட்டியும் முதலுமா திருப்பி எடுத்துகிட்டேன். இன்னமும் கொஞ்ச நாளைக்கு இது தாங்கும்ங்க.
நியூஸ்டிக் ரேட்டிங் – 8/10
விமர்சனம் by சினிமா பைத்தியம்

No comments:
Post a Comment