Saturday, March 22, 2014

மகேஷ் பாபுவுடன் நடிக்க சமந்தா மறுப்பு

மகேஷ் பாபுவுடன் மோதல் ஏற்பட்டதால் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகவே வந்துகொண்டிருந்தது. நான் ஈ படத்துக்கு பிறகு வாய்ப்பு மழை கொட்டத் தொடங்கியது. இந்நிலையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டதால், மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார். சிகிச்சைக்குபிறகு குணம் அடைந்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். 

அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதையடுத்து விளம்பர படம் ஒன்றில் நடிக்க வந்தார் சமந்தா. மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்க மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டபோது,மணிரத்னத்திடமிருந்தோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ புதிய படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என்றார். 

சமீபத்தில் மகேஷ்பாபு பட போஸ்டரை பார்த்து சமந்தா கொதிப்படைந்தார். அதில் பட ஹீரோயினை நாயை போல் சித்தரித்து இருப்பதாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். பதிலுக்கு சமந்தாவை மகேஷ்பாபு ரசிகர்கள் சாடினர். ரசிகர்களை மகேஷ்பாபு தடுக்கவில்லை. மறைமுகமாக சமந்தா&மகேஷ்பாபு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க மணிரத்னம் தரப்பில் கேட்டபோதுதான் சமந்தா நடிக¢க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

source: dinakaran

No comments:

Post a Comment