அருந்ததி படத்தில், ஆவேச நடிப்பை வெளிப்படுத்திய போதும், அதன் பின், அனுஷ்காவை தோலுரிக்க, ஆந்திரவாலாக்கள் தயங்கவில்லை. பிகினி, டூ பீஸ் களத்திலும் இறக்கி விட்டனர். ஆனால், தற்போது, ராணி ருத்ரம்மா தேவி மற்றும் பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, இனிமேல், இந்த, 'இமேஜை' பாதுகாக்கப் போவதாக கூறுகிறார். அதனால், அடுத்த ஆண்டில் நடிப்பதற்காக, சில கமர்ஷியல் டைரக்டர்கள் சொன்ன கதையைக் கேட்ட அனுஷ்கா, தன், 'இமேஜை' கூறு போடும் கதைகளாக இருந்ததால், தடாலடியாக மறுத்துவிட்டார். மேலும், சில கிளாமர் காட்சிகளை குறிப்பிட்டு, 'இந்த காட்சிகளுக்கு, இப்போதே கத்திரி வைத்தால், நடிப்பது பற்றி, மறுபரிசீலனை செய்கிறேன்...' என்று, தன் கண்டிஷனையும் சொல்லி அனுப்பியுள்ளார். அவரவர் அக்கறைக்கு அவரவர் படுவார்.
SOURCE: DINAMALAR
SOURCE: DINAMALAR


No comments:
Post a Comment