Sunday, March 23, 2014

முன்னாள் கணவர் டாம் லீயுடன் செக்சில் ஈடுபடும் வீடியோ தனது மகன்களுக்கு தெரியும்: பமீலா ஆண்டர்சன்

பேவாட்ச் என்ற செக்சியான டி.வி. தொடரில் நடித்து புகழ் பெற்றவர் பமீலா ஆண்டர்சன்.  இவர் பெடா எனப்படும் விலங்குகள் நல அமைப்பிற்காக நாய்களை அதன் உரிமையாளர்கள் நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆடையின்றி நடித்து புகழ் பெற்றவர்.  இவருக்கு 17 வயதில் பிராண்டன் தாமஸ் மற்றும் 16 வயதில் டைலன் ஜாக்கர் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இவர் கடந்த 1995ம் ஆண்டில், தனது முன்னாள் கணவரான டாமி லீயுடன் தேனிலவுக்கு சென்றுள்ளார்.  அங்கு அவருடன் தனிமையில் செக்சில் ஈடுபடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.  இது இப்பொழுதும் இன்டர்நெட்டில் உள்ளது.
இந்த வீடியோ குறித்து எல்லி என்ற செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், எனது மகன்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளார்களா? என்று எனக்கு தெரியாது.  ஆனால், இது பற்றி அவர்களுக்கு தெரியும்.  அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.  ஆனால் இது குறித்து மற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.  ஸ்டுபிட் (முட்டாள்) இன்டர்நெட் என்று பொரிந்து தள்ளி விட்டார்.  பமீலா ஆண்டர்சன் தன்னிடம் அறிமுகமான 4 நாட்களில் டாம் லீயை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், 3 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.  தற்பொழுது, 46 வயதான பமீலா புதிதாக பிக்சி மாடலில் தலைமுடியை வெட்டி உள்ளார்.  இது பற்றி எல்லி செய்தி இதழுக்கு அளித்த பேட்டியில், சிறிய அளவிலான தலைமுடியை வைத்து கொண்டு செக்சில் ஈடுபடுவது வித்தியாசமாக இருக்கும் என்று நான் கருதினேன்.  அதனால் இதுபோன்ற தலைமுடி ஸ்டைலுக்கு மாறி விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
SOURCE: DAILY THANDHI

No comments:

Post a Comment