விருதுநகர்: நதி நீர் இணைப்பு குறித்து சிந்திக்காமல் அவரது குடும்ப இணைப்பு நினைவில் தான் கருணாநிதி இருந்து வருகிறார் என்று ஜெ., கடுமையாக தாக்கி பேசினார். இன்று ( 21 ம் தேதி வெள்ளிக்கிழமை ) மதியம் விருதுநகர் தொகுதி தொகுதி வேட்பாளர் ராதா கிருஷ்ணனை ஆதரித்து அ.தி.மு.,க பொது செயலர் ஜெ., பேசினார்.
அவர் அவர் மேலும் பேசியதாவது;
இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமெனில் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டும். இந்தியாவை வேட்டைக்காடாக்கி, சூறையாடிய மத்தி்ய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற மன நிலையில் தான் உள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். சுதந்திரம் அடைந்து 66 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சுதந்திர உணர்வு ஏற்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதனை மக்களாகிய நீங்கள் மட்டும் தான் செய்ய முடியும். செய்வீர்களா ? மத்தியில் அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்போது தான் தமிழக மக்கள் வாழ்வு வளம் பெறும். விலைவாசி உயர்வு பணவீக்கம் வேலைவாயப்பின்மை என பல பிரச்னைகள் உள்ளது. ஊழல் ஒரு புறம் தலைவிரித்தாடுகிறது. இது போன்ற மோசமான அரசு இல்லை என்ற அளவிற்கு காங்கிரஸ் ஆட்சி நடத்தியுள்ளது. இவர்களுடன் ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க., என்பதை மறந்து விடாதீர்கள். கொடுங்கள் அரசிடம் இருந்து காப்பாற்றும் தருணம் வந்து விட்டது. தமிழக மக்களின் நலனுக்கு செயல்படும் அ.தி.முக.,வுக்கு ஆதரவு தர வேண்டும்.
கச்சத்தீவு மீட்க நான் செய்த மனுவுக்கு எதிர் மனு தாக்கல் செய்தது மத்திய அரசு, தமிழகத்திற்கு மண்ணெண்ணெய், மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்க மறுப்பது, காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க மறுப்பது. பெட்ரோல் விலை உயர்வு ஏற்றுவது என துரோகங்களை செய்து வருகிறது. மாநில உரிமையை பறிக்கிறது. கூடுதல் நிதிச்சுமையை மாநில அரசு மீது சுமத்துகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் காங்கிரஸ், மற்றும் தி.மு.க.,வுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ள. அதற்கு நீங்கள் அ.தி.முக.,வுக்கு வாக்களிக்க வேண்டும். செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?
பெரும்பாலான பிரச்னைகளுக்கு பொறுப்பு மத்திய அரசிடம்தான் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை. மாறாக மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது. தமிழனத்தை அளித்த தி.மு.க,வுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் செய்வீர்களா ? தி.மு.க., இதுவரை அளித்த வாக்குறுதி எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா ? மக்களை ஏமாற்றும் தி.மு.வுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். கருணாநிதி நினைப்பெல்லாம் , குடும்ப இணைப்பில்தான் என்பதை தவிர நதி நீர் இணைப்பில் இல்லை.
ஊழல் என்பதே காங்கிரசின் தாரக மந்திரம், இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். மத்தியில் அங்கம் வகித்த தி.மு.க., மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ததா ? இல்லை. உங்கள் ஓட்டு என்பது உங்கள் உரிமை, இந்த நாட்டின் சொத்து உங்கள் வாக்கு தான் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றப்போகிறது. அத்தகைய சக்தி படைத்தது. வீணாக்கி விடாதீர்கள். பல கட்சிகள் களம் இறங்கியுள்ளன. வேறு கட்சிக்கு நீங்கள் வாக்ளித்தால் வெற்றி பெற போவதில்லை. எனவே 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக இதய தெய்வம் புரட்சி தலைவரின் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். மத்தியில் வலிமையான ஆட்சி அமையும், நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.
தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்ம் ஏற்பட வேண்டும். மாற்றம் மூலம் அ.தி.மு.,க வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இதன் மூலம் நாட்டு மக்கள் ஏற்றம் பெறுவார்கள். உங்கள் ஆதரவோடு மத்தியில் அங்கம் வகிக்கும் ஆட்சி அமையும் போது, தமிழகத்தின் உரிøமை நிலை நாட்டவும், இலங்கை தமிழர்களை கொன்றவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்று தரவும், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கிடவும், வாய்ப்பாக இருக்கும்.
மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் ஆட்சி மட்டுமல்ல. மக்கள் ஆட்சியை மலர செய்ய வேண்டும். அமைதி வளம், வளர்ச்சி என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்தி செல்ல நல் வாய்ப்பினை எனக்கு நல்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்தியா திருநாட்டை காப்பாற்றுங்கள். இவ்வாறு ஜெ., பேசினார்.
Source: the hindu

No comments:
Post a Comment