சென்னை,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை, ஏப்ரல் 3–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம், ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராகவும், உத்தரவிடப்பட்டது.
வருமானவரி வழக்கு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா நடராஜன் மீது, வருமானவரித்துறையினர் தொடர்ந்த வழக்கில், சென்னை எழும்பூர் 1–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று காலை இந்த வழக்கு, மாஜிஸ்திரேட்டு தட்சிணாமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வருமானவரித்துறை சார்பில் சீனியர் வக்கீல் ராமசாமியும், ஜெயலலிதா தரப்பில் சீனியர் வக்கீல் குமாரும் ஆஜர் ஆனார்கள்.ஏப்ரல் 3–ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அன்றைய தினம் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்றும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு, தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை 3 வாரங்கள் தள்ளி வைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா தரப்பு வக்கீல் கோரிக்கை வைத்தார், என்பது குறிப்பிடத்தக்கது.
Source: daily thandhi
No comments:
Post a Comment